×

பீட்ரூட் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், நரசீபுரம், தீத்திப்பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இது 60 நாள் முதல் 70 நாள் பயிர். தற்போது விவசாயிகள் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பருவமழை தீவிரமடைய துவங்கியுள்ளதால் அறுவடை செய்யப்பட்டு வரும் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் மூங்கில் பட்டறை அமைத்து இருப்பில் வைத்து பாதுகாக்கின்றனர். பருவமழையினால் வெங்காயம் அழுகும் ஆபத்து இருப்பதாகவும், அதனால் தற்போது சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேபோல், மாதம்பட்டி, வீரகேளரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 30 முதல் 40 ஏக்கருக்கு மேல் பீட்ரூட் பயிரிடப்பட்டிருந்தது. இந்த பீட்ரூட் அறுவடைக்கு தயாராகியுள்ளதை அடுத்து விவசாயிகள் பீட்ரூட் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர். நேரடி சந்தை விலையில் தற்போது பீட்ரூட்-க்கு குறைவான விலை கிடைப்பதால் ஏலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து பீட்ரூட் விவசாயி கூறுகையில், “நடப்பாண்டில் பீட்ரூட் விளைச்சல் நன்றாக உள்ளது. எதிர்பார்த்ததைவிட நல்ல விளைச்சல். கிலோ 15-க்கு விற்பனையாகிறது.  மார்க்கெட்டில் ஒரு மூட்டை ரூ.80 முதல் ரூ.90க்கு கேட்கின்றனர். இதனால், ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவுள்ளோம். இதனால், எங்களுக்கு லாபம் கிடைக்கும்” என்றார்.

Tags : Beetroot yield, amazement, farmers delight
× RELATED வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு...